இப்படி பொதுவாக சொல்வார்கள்.
ஆனால் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த தியாகம் திரைப்படத்தில் அவர் ஒரு மீனவர். படம் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி என்கிற அற்புதமான பாடல் இடம்பெற்ற திரைப்படம்.
அதுபோலவே புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன் ஆகிய இரண்டு பெரிய வெற்றிகளுக்கு பிறகு ஆர்கே செல்வமணி பிரசாந்த்தை நாயகனாக வைத்து ரோஜாவை தமிழில் அறிமுகப்படுத்தி எடுத்த திரைப்படம் செம்பருத்தி. அதில் ரோஜா மீனவர் குடும்பத்துப் பெண். படமும் கடல் புற வாழ்வியலை ஒட்டியே இருக்கும். அதுவும் 100 நாட்கள் ஓடிய வெற்றி படம் தான்.
படகோட்டி ரிலீஸின் போது எப்படி போனது என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் நிறைய முறை ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்படி ஆனாலே மக்கள் மனதை கவர்ந்தது என்று தான் அர்த்தம்.
@ksrajabeஏன் @teakkadai1 sir இந்த sentiment உண்மையா?
கடல் & மீனவர்கள் பற்றிய படம் சரியா போகாதமே உண்மையா? சாய் வித் சித்ரா வில் யார் சொல்லியோ கேட்டேன் ,
mgr ஓட படகோட்டி யுமே பெரிய ஹிட் கிடையாதாம் , கமல் Sir கடல் மீன்கள் படமும் பெரிய ஹிட் இல்ல , விஜய் Avl நிலாவே வா , சுறா இந்த படங்கள் சரியா போகல மணிரத்னம் கடல் கேக்கவே வேணாம் , அஜித் Avl சிட்டிசன் எதிர்பார்த்த hit இல்லை.. இந்த சென்டிமென்ட் உடைச்சது சூரி yoda மண்டாடி தானா 🤔 கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்..சொல்லுங்க கேப்போம்..