தமிழில் #core4 ✌️🖤
அடிப்படையில் இது நியாயமான கோரிக்கைதான். பகுத்து ஆய்வோம் வாங்க.
1. தமிழ்நாட்டுக் கோயில் மரபு தொன்மையால் அல்ல, தொடர்ச்சியால் நிலைத்து நிற்கிறது.
2. மிக ஆபாசமான உங்கள் #D எதிர்ப்புப் பரப்புரை இதைக் குலைக்கத் துடிக்கிறது.
3. ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ — பேச்சல்ல, திராவிடச் செயல்களைப் பார்ப்போம். உங்கள் தலைமை எளியோர்கள் அல்ல; நில, வள, பண, அதிகார வலிமை படைத்தவர்கள். "கோயில் கட்டிய இனம்" என்றும் சொல்லிக்கொள்கிற சாதிகள். பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர் ஆக முடியாமல் இருக்கும் அவல நிலை உங்களை த் துன்புறுத்தினால், மாவட்டத்திற்கு ஒரு சிதம்பரம் கட்டி அதில் உங்கள் ஆட்களை அர்ச்சனை செய்ய வைத்திருப்பீர்கள்.
👉👉ஏன் செய்யவில்லை? ஆகவே, உங்கள் பரிந்துரை "இன்னாரை அர்ச்சகர் ஆக்குக" ‘எதிரிகளை, குறிப்பாகப் பெரியாரிஸ்டுகளை’ உட்புகுத்தவே உதவும்.
அது தொடர்ச்சியைக் குலைக்கும். தொடர்ச்சி அறுபட்டால் மரபு மாண்டு போகும்.
🔥நீங்கள் கோயில் கட்டி, அதில் ஒரு தோழமை அர்ச்சகர் குழுவை உண்டாக்கி, அவர்கள் ஆகம அர்ச்சகர்களைவிடச் சிறந்தவர்களாக உருவாகி வந்தால், யாராலும் அவர்களைத் தவிர்க்க முடியாது ==> தடுக்கவும் மாட்டார்கள். உங்கள் கொள்கையை மையப்படுத்திப் பேசுங்கள், விளங்கும்.