மதிப்பிற்குரிய முன்னாள் நிதியமைச்சர் அவர்களே,
ஏப்ரல்–அக்டோபர் காலத்தை நீங்களே தேர்ந்தெடுத்தீர்கள். அதே காலம், அதே AG அறிக்கை — நீங்கள் குறிப்பிடாத எண்கள் இவை:
• சொந்த வரி வருவாய்: ₹1,07,104 → ₹1,20,825 கோடி (+12.8%)
• ஜிஎஸ்டி: +₹7,063 கோடி (+17.2%)
• வணிக வரி: +₹3,449 கோடி
• நிதிப் பற்றாக்குறை: ₹5,168 கோடி குறைவு
• வட்டி தவிர்த்த பற்றாக்குறை: 60.9% குறைவு
• மத்திய மானியங்கள்: 38.5% குறைவு — இதைப் பற்றி ஏன் மௌனம்?
மூலதனச் செலவு பற்றி: உங்கள் ஆட்சியிலேயே 2025-26ல் ஆண்டுச் செலவில் 67.5% நவம்பர்–மார்ச்சில்தான் நடந்தது. அந்த முழு ஆண்டிலும் உங்கள் சொந்த இலக்கை விட 11% குறைவாகவே செலவிட்டீர்கள்.
இன்று ஒவ்வொரு ₹100 வருவாயிலும் ₹21 பழைய கடனுக்கு வட்டி. முழு எண்களையும் பேசுவோம்.
ஆதாரம்: மாநிலக் கணக்காயர் (A&E), தமிழ்நாடு — அக்டோபர் 2026