The writings of Prabhakaran are very sharp, and at the same time, they are constructed in simple words. It is far more difficult to explain intellectual matters in simple sentences that everyone can understand than to explain them in complicated sentences.
One of the sentences of his that impressed me the most is: "A people united by an ideal cannot be defeated by any power in the world." This is a sentence with very deep meaning among political teachings.
Only those who deeply understand progressive, leftist theory will understand the importance of the politicisation of the masses. Prabhakaran explained to the Tamil people, in his simple sentence, the political war strategy of General Giap, the commander of the Vietnamese fighters who fought against America. He himself implemented those war strategies and achieved victories. His act of handing over the slogan of struggle to the people as his final battlefield tactic made him a distinctive leader among global revolutionaries. After 2009, the May 17 Movement has been continuously speaking about his politics. We will continue that work.
We will take his teachings and thoughts on liberation of the suppressed to the whole world.
Long live Tamil Nationalist Leader Prabakaran & Tamil Eelam!
தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பதிவுகள் மிகக் கூர்மையானவை, அதேசமயத்தில் அவை எளிய வார்த்தைகளால் கட்டப்பட்டிருக்கும். அறிவார்ந்த விடயங்களை, சிக்கலான வாசகங்களால் சொல்வதைவிட எளிய வாசகங்களாக அனைவருக்கும் புரியும்படி சொல்வது மிகக்கடினமானது.
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று,
"..இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களை, உலகின் எந்த சக்தியாலும் வெல்ல முடியாது" எனும் வாசகம்.
அரசியல் அறிவுரைகளில் மிகவும் ஆழமான பொருள்பொதிந்த வாசகம் இது.
முற்போக்கு, இடதுசாரி கோட்பாட்டை ஆழமாக அறிந்தவர்களால் மட்டுமே, வெகுமக்கள் அரசியல்படுவதன் முக்கியத்துவம் புரியும். அமெரிக்காவை எதிர்த்து போர்புரிந்த வியத்நாம் போராளிகளின் ஒப்பற்ற தளபதி ஜெனரல் கியாப்பின் அரசியல் போர்தந்திரத்தை தனது எளிய வாசகத்தால் தமிழ் மக்களுக்கு விளக்கியவர் மேதகு பிரபாகரன். அந்த போர் தந்திரங்களை அவரே நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டார். அவரது இறுதி யுத்த கள செயல்தந்திரமாக, போராட்ட முழக்கத்தை மக்களிடம் ஒப்படைத்ததே அவரை உலகளாவிய புரட்சியாளர்களில் தனித்துவமான தலைவராக்கியது. 2009க்குப் பின்பான காலத்தில் மே17 இயக்கம் தேசியத்தலைவரின் அரசியலை தொடர்ச்சியாக பேசி வந்துள்ளது. இனியும் அப்பணியை தொடர்வோம்.
ஒப்பற்றத் தலைவனின் உயர்ந்த மானுடநேயக் கருத்துகளை உலகெங்கும் கொண்டு செல்வோம்.
வெல்க எம் தலைவர் புகழ்!
வெல்லட்டும் அவரது இலட்சியம்!!
வாழ்க தமிழீழம்!!!
