I Paranthamen (@iparanthamen)

@iparanthamen reposted
M.K.Stalin @mkstalin 2026-11-27T14:42:20.000Z

தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.

7975 3339 1302916 1527 440
I Paranthamen @iparanthamen 2026-11-26T02:43:27.000Z

மேதகு தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் அவர்களை இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சந்திக்கிறார். Honble LOP Mr.Udhayanidhi Stalin is meeting His Excellency TN Governor today at 10 am at Lokbhavan. @lokbhavan_tn @Udhaystalin @Office_of_Udhay @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing @DMKLegalWing @PTI_News

633 167 79951 187 56
I Paranthamen @iparanthamen 2026-11-25T11:38:35.000Z

மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்களின் இந்த ஒரு செய்தியாளர் சந்திப்புக்கே பயந்திட்டியா @actorvijay @TVKVijayHQ குமாரு? ஓடி ஒப்பாரி வைக்கிர! @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing #KallakurichiTVKMLA https://t.co/V9qMpmFSMH

1553 548 25669 189 15
@iparanthamen reposted
Mohamed Imranullah S @imranhindu 2026-11-25T11:16:58.000Z

BREAKING Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt requests the services of Director General of Police G. Venkataraman, now serving as the Director of Fire and Rescue Services and a former head of DVAC, to go through the materials being collected by the DVAC team presently investigating the fraud in procurement of books to various public libraries across the State and file regular reports before the court. He orders that Mr. Venkataraman can suggest the measures to be taken by the investigating officer. The judge further orders that the Director of V&AC must coordinate with Mr. Venkataraman. Passes the orders on a writ petition filed by DMK legal wing joint secretary I. Paranthamen seeking registration of a FIR on the basis of his complaint. @THChennai @the_hindu Backgrounder👇https://www.thehindu.com/news/national/tamil-nadu/ai-generated-book-purchase-case-dmks-paranthamen-moves-madras-high-court-seeking-registration-of-fir-by-dvac/article71686183.ece

154 28 37308 2 5
@iparanthamen reposted
Udhay @Udhaystalin 2026-11-25T07:39:26.000Z

பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம். பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார். இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும். குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம். இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம். ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.

4682 2338 126030 608 77
I Paranthamen @iparanthamen 2026-11-24T16:51:17.000Z

திருநின்றவூர் நகரக் கழகச் செயலாளர் திரு தி.வை.ரவி, எம்.சி.-திருநின்றவூர் நகர் மன்றத் தலைவர் திருமதி உஷாராணி ரவி ஆகியோரின் மகனும் நகர இளைஞர் அணி துணை அமைப்பாளருமான தம்பி ஆர்.ஸ்டீவாக்-ஏ.விஜயலட்சுமி இணையரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினேன். @office_krishna #Thiruninravur

123 9 2346 1 0
@iparanthamen reposted
Udhay @Udhaystalin 2026-11-24T05:15:43.000Z

ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி. இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா? அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா? இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும். அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும். இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.

6338 2856 259895 777 150
@iparanthamen reposted
M.K.Stalin @mkstalin 2026-11-24T02:55:47.000Z

ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.

7358 3809 281618 403 172
I Paranthamen @iparanthamen 2026-11-23T08:38:13.000Z

அதிகாரிகள் முன்னிலையில் அரசியல் தாக்குதல்: ஆரோக்கியமான மரபா? முரசொலி படித்தால் அறிவாளிகளா? என்றால் முரசொலி படித்தவர்கள் அரசியல் தெளிவானவர்களே!

தவெக அமைச்சர்கள் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் நடக்கும் பிரஸ் மீட்டுகளில் எதிர்க் கட்சிகளை குறி வைத்து அரசியல் பேசுவதும் பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பது தொடர்கதையாகி கொண்டிருக்கிறது. 

அந்த பத்திரிகையாளர் சந்திப்புகளில் அமைச்சர்களுக்கு இருபுறமும் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்திருக்கிறார்கள். அரசியல் குறித்தான கேள்விகளுக்கு  அமைச்சர்கள் பதில் அளிக்கும் போது, அதிகாரிகள் அங்கே இருக்க வேண்டியதில்லை. புத்தக கொள்முதல் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் பேட்டி அளித்த போது ’ஆண்மை இருந்தால்’ என்ற சொல்லாடலை பயன்படுத்தினார். அப்போது பெண் அதிகாரிகள் அருகில் இருந்தார்கள். இப்படியான நிகழ்வுகளை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். ’ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ செயல்படாமல் முழுமையான நடுநிலைமையைக் கடைப்பிடிப்பது கட்டாயம்’ என்கிறது அகில இந்திய பணிகள் நடத்தை விதிகள். அரசு நிர்வாகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பங்கு மற்றும் அரசியல் நடுநிலைமை குறித்து அதில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அரசின் திட்டங்கள், நிர்வாக ரீதியான விளக்கங்களை அளிக்கும் செய்தியாளர் சந்திப்புகளில் அமைச்சர்களுக்கு உதவியாக அதிகாரிகள் பங்கேற்பது சரி. ஆனால், எதிர்க் கட்சிகளைத் தாக்கும் முழுமையான அரசியல் மேடையாக அந்த செய்தியாளர் சந்திப்புகள் மாறும் போது, அரசு அதிகாரிகள் அமர்ந்திருப்பது நிர்வாக நடுநிலைமைக்கு எதிரானது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகள் சான்றிதழ் வழங்குவது போல நடந்துவிடக் கூடாது. அரசுத் துறை சார்ந்த தரவுகளை மட்டும் அதிகாரிகள் விளக்கிவிட்டு வெளியேறுவதும், அரசியல் ரீதியான பதில்களை அமைச்சர்கள் தனியாக வழங்குவதுமே ஆரோக்கியமான ஜனநாயக மரபாகும். அரசியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் இடங்களில் அதிகாரிகள் இருப்பது, அரசு இயந்திரம் ஒரு சார்பாகச் செயல்படுகிறதோ என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பிவிடும். அமைச்சர்களின் அரசியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்க் கட்சிகள் நீதிமன்றத்தை நாடினால், அந்த நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகளும் வழக்கில் தேவையில்லாமல் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டுவிடும். இப்படியான அவதூறு வழக்குகளில் நிகழ்வு நடந்த போது உடன் இருந்தவர்களுக்கும் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய வேண்டும். @arivalayam @dmk_youthwing @DMKITwing @DMKWomensWing @legalwingofdmk @IASassociation #IAS #IPS @CMOTamilnadu

717 299 17076 45 4
I Paranthamen @iparanthamen 2026-11-23T07:36:29.000Z

சென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் தெற்குப் பகுதி, 61-வது வட்டம் பாக முகவர் தம்பி திரு. ஜீவா அவர்களின் தந்தை திரு. k.பலராமன் (வயது 55) இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினேன். https://t.co/Z8k0Q6jNiM

205 25 2899 2 0
@iparanthamen reposted
Udhay @Udhaystalin 2026-11-22T03:28:48.000Z

Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்! இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது. சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார். அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன. இந்த நிலை ஏற்படக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் - அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம். ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள். ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்!

4413 1889 348094 1122 168
@iparanthamen reposted
M.K.Stalin @mkstalin 2026-11-20T13:55:05.000Z

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்.

@arvindgunasekar

Thiruparankundram case: SC permits lighting of a lamp at Deepathoon in Thiruparankundram on Nov 24, 2026.

4104 1465 565276 794 193
@iparanthamen reposted
Udhay @Udhaystalin 2026-11-20T13:23:44.000Z

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM? ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது. இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்.

2537 1276 119416 622 74
@iparanthamen reposted
M.K.Stalin @mkstalin 2026-11-20T07:47:50.000Z

குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்! 🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்? 🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்? 🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது? 🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? முதலமைச்சர் அவர்களே… அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்! விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்! #Cauvery #DeltaFarmers #TVKfails

@niranjan2428

காவேரி விஷயத்தில் ஒரே வார்த்தையில் தமிழ்நாடு அரசின் மனுக்களை Dismissed என சொல்லி தள்ளுபடி செய்து விட்டது உச்ச நீதிமன்றம் அதைத்தான் ஏற்க முடியவில்லை 😰

3876 1737 147762 166 41
@iparanthamen reposted
Udhay @Udhaystalin 2026-11-20T06:39:21.000Z

திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி நீதிக்கட்சி உருவான நாள் இன்று! சமூகநீதி - பெண் விடுதலை - சுயமரியாதை - மாநில உரிமை - மொழி உரிமை ஆகியவற்றை தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக்கியது நீதிக்கட்சி. நீதிக்கட்சியின் வழியில் இந்த அடையாளங்களை வளர்த்தெடுத்தது திராவிட முன்னேற்ற கழகம். தமிழ்நாட்டின் இப்பெருமைகளை அழிக்கத்துடிக்கும் Reels சோப்ளாங்கிகளின் முயற்சிகளை முறியடிப்போம். நீதிக்கட்சி காட்டிய கொள்கை பாதையில் இன்னும் உறுதியோடு நடைபோடுவோம். #JusticeParty

1993 934 44781 121 6
@iparanthamen reposted
M.K.Stalin @mkstalin 2026-11-20T04:26:55.000Z

இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது. கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது. அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும். ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. #TVKfails

3171 1636 126906 337 59
@iparanthamen reposted
Udhay @Udhaystalin 2026-11-19T10:58:55.000Z

சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. திரு.பாபு அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்கள் - அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

6626 1204 315698 205 20
I Paranthamen @iparanthamen 2026-11-19T03:32:22.000Z

நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடுவேனு சொன்னா பயந்திடுவேன், பிரஸ் மீட் பண்ணமாட்டேன்னு நினைக்கிறீங்களா மாண்புமிகு @AadhavArjuna அவர்களே! வழக்கெல்லாம் வழக்கம்போல நாங்க நீதிமன்றத்துல சந்திப்போம். பிரச்சனைக்கு பதில் சொல்லாம நோட்டீஸ் விடுரது கேஸ் போட்டுடு வேன்னு மிரட்ரது இப்படி பண்ணா எனக்கு உங்கள, உங்க கட்சியை, உங்க ஆட்சியை பார்த்தா சிரிப்பு தான் வருது. எனக்கு இந்த நேரத்துல ஒரு Dialogue தான் நினைவுக்கு வருது.. என்ன நீங்க பயந்துட்டீங்களா குமாரு? @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing

2610 934 145967 222 48