சமீப காலமாக, துயில் எழுந்து காமெடியாகக் கதறி, பெண்களின் பாதுகாவலனே தான்தான்(?) என்பதுபோல ரீல் விட்டுக்கொண்டு சுற்றி வருகிறார் ரீபோஸ்ட்நிதி.
Who are you என்று பவரில் இருந்தபோது பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, இப்போது பஞ்சரானதும், பம்மிப் பதுங்கி, மண்ணோடு மண்ணாகத் தவழ்ந்து சென்று மனுகொடுத்து மன்றாடியும் வருகிறார். மண்டையை ஆட்டி ஆட்டிப் பேட்டிக் கொடுத்தும் பீலாவிட்டுப் பிதற்றி வருகிறார். மக்கள் அவருடைய பேட்டியை ‘நாங்கள் சினிமா செய்திகளே பார்ப்பதில்லை’ என்ற ரீதியில் சுண்டுவிரலால் டச் ஸ்க்ரீனில் தள்ளிவிட்டுத் தவிர்த்து வருகின்றனர்.
டம்மி வாரிசான டகால்ட்டிநிதியின் ‘பெண்கள் பாதுகாவலன் வேடம்’ தாறுமாறாகக் கிழியும் வகையில் திமுக எம்.எல்.ஏ. ஒருவரே செயல்பட்டு உள்ளார். அந்த எம்.எல்.ஏ. வேறு யாருமல்ல. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. திரு.வசந்தம் கார்த்திகேயனே. அதாவது, பெண்கள் முன்னிலையிலேயே ஆபாசமாகப் பேசி அலறவிடும் டம்மி டாடியின் ஆபாசக் கொள்கைப் படையில் அணிவகுப்பவர் என்று சொன்னால், அவர் யாரென்று இன்னும் ஆழமாகப் புரியும்.
தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் பெண் அதிகாரி திருமிகு. அ.லலிதா அவர்களை வசந்தம் கார்த்திகேயன் தகாத வார்த்தைகளில் மரியாதைக் குறைவாகப் பேசி இருக்கிறார்.‘தான் யார் என்று தெரியுமா?’ என்று கேட்டுத் தன் அதிகாரத் திமிரைக் காட்டி மிரட்டி இருக்கிறார். இது குறித்து, அந்தப் பெண் அதிகாரி கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் புகார் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, புகாரின் அடிப்படையில், அதிகாரத் திமிரோடு பெண் அதிகாரியை மிரட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது தியாகதுருக்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் திருமிகு.லலிதா அவர்களும் பெண் அதிகாரிதான் என்பது, பெண்களுக்காக வாதாடுவதுபோல வேடம் போடும் வக்கற்ற வாரிசான வக்கிரநிதிக்குத் தெரியும்தானே?. பெண் அதிகாரி ஒருவரை, திமுகவின் ரத்தத்தில் ஊறிப்போன பண்ணையார்த்தன அதிகாரத் திமிருடன், தகாத முறையில் பேசி மிரட்டித் துன்புறுத்தியதற்காகத் தங்கள் எம்.எல்.ஏ.வை உச்சிமேல் வைத்து மெச்சப் போகிறாரா இந்த ஒப்பாரிநிதி?.
வகையற்ற வாரிசான உதறல்நிதி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?. துப்புக்கெட்ட வாரிசான டுமீல்நிதி இதுபற்றித் துப்பறியுமாறு எந்தத் தபால்காரரைப் பார்க்க, தன் அடிப்பொடிகள் அணிவகுக்கத் தரையில் உருண்டு போகப் போகிறார் இந்தப் புலம்பல்நிதி?.
மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் இந்த எடுபடாத வாரிசான இயலாமைநிதி, பெண் அதிகாரி ஒருவரைத் துன்புறுத்தியதற்காக தங்கள் கட்சி எம்.எல்.ஏ.வைத் தாமாக முன்வந்து அழைத்துக்கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்துவாரா?. இல்லையெனில், துப்பட்டாவைத் தலையில் கட்டிக்கொண்டுத் தும்மி விட்டு, அடுத்தவர் மீது அவதூறு பரப்பி, தங்கள் எம்.எல்.ஏ.வை ‘என் அன்பிற்கினிய அதிகாரத் துஷ்பிரயோகத் திலகம் வாழ்க’ என்று போற்றிப் புகழப் போகிறாரா?. அல்லது வழக்கம்போல தி.மு.க. என்றாலே வக்கிரமும் வன்மமும் நிறைந்த ஆபாசக் கூட்டம்தான் என்று எண்ணி மகிழ்ந்து, குப்புறப்படுத்துக் கொண்டு கும்பகர்ணத் தூக்கத்தை தொடரப் போகிறாரா?.
என்னதான் செய்யப் போகிறார் இந்த எடுபடாதநிதி?. வழக்கம்போல முன்பே தயார் செய்த கேள்வி-பதில் நாடகத்தை நடத்திவிட்டு, அந்நாடகத்தையும் தொடர முடியாமல் மரத்தின் பின்னால் சென்று மறைந்துகொள்ளப் போகிறாரா இந்த மழுப்பல்நிதி?.
எது எப்படி இருந்தாலும், பெண்களைத் துச்சமாக மதிப்பதுதான் திமுகவின் மரபணு என்பதை மக்கள் மனதில் இருந்து அகற்றவே இயலாது. இதை வக்கற்ற, வகையற்ற, துப்புக்கெட்ட, தூங்குமூஞ்சியான டம்மி வாரிசு டப்பாநிதி டபராசெட்நிதி உணர்ந்தால் சரி.