பாக்டீரியா (@Bacteria_Offl)

பாக்டீரியா @Bacteria_Offl 2021-10-28T13:25:41.000Z

கடவுள் உண்டா? இல்லையா? மதம் என்றாலே, கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் புனையப்பட்ட கண்மூடிக் கொள்கைகளின் கதம்பம் என்று பொருள், எனவே, மதத்தைப்பற்றி ஆராயும்போது, மதத்திற்கு அடிப்படையாய் விளங்கும் கடவுள் உண்டா இல்லையா என்பதை முதலில் ஆராயவேண்டியது அவசியமாகும். (1/116)

1652 493 190 50
பாக்டீரியா @Bacteria_Offl 2026-11-27T20:16:36.000Z

Single company தான் வந்திருக்காங்க... But எந்த அளவுக்கு டேஞ்சர்னா அணில் குட்டிகளா https://t.co/JhjdmEk9p2

@PttvNewsX

திருப்பரங்குன்றத்தில் நாளை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பாதுகாப்புப் பணி தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு CRPF வீரர் சொன்ன பதில்! #SupremeCourt | #TNGovt | #ThiruparankundramDeepam | #Thiruparankundram | #Madurai | #CRPF https://t.co/P8xvhTqlMr

20 1 3314 0 0
BLACK @Ranjith_R23 2026-11-27T15:07:45.000Z

மக்கள் வரிப்பணத்தில் தான டா சம்பளம் வாங்குறீங்க?? @OGPrasanna @GuRuThalaiva HRNC சட்டத்தை மீறி திருப்பரங்குன்றம் கோவில் அரங்காவல் குழுவில் "Regina" என்ற கிறிஸ்துவரை எப்போ யாரால் நியமிக்கப்பட்டது சொல்லு ? AI edit இல்லாம உண்மைய சொல்லுங்க.. #TVKFails

115 54 4089 6 1
பாக்டீரியா @Bacteria_Offl 2026-11-27T17:08:29.000Z

போன வருஷம் கூட விளக்கேத்த கோர்ட் ஆர்டர் போட்டுச்சு... அதெல்லாம் ஒரு டேசும் ஏத்த முடியாது உங்களால முடிஞ்சத பண்ணுங்க we will face the consequencesனு bold ah சொல்லுச்சு திமுக... இப்ப இது சோப்ளாங்கி அரசு, ராமர் பிள்ளை டம்மினு கோர்ட்டுக்கு தெரிஞ்சிருக்கு அதான் காரணம் ஆண்டி https://t.co/Z9nrmjZhrt

@Its__Anu

60 வருஷமா CRPF வர்ற அளவுக்கு பெரிய பிரச்சனைய திமுக Face பண்ணல, இதுக்கு Under Dealing கூட ஒரு காரணமா இருக்கலாம் .... ஆனா விஜய் வந்த முதல் வருஷத்துலயே இத Face பன்றாருனா, Central Government அழுத்தத்துக்கு அடிபணியாம கூட இருக்கிறது ஒரு காரணமா கூட இருக்கலாம்...

209 61 3733 1 0
பாக்டீரியா @Bacteria_Offl 2026-11-27T15:10:05.000Z

இங்க ஆன்லைன்ல ஆவாஸ் காட்டுற ஒரு அணில் கூட நேர்ல போகாதுங்க... வெளிநாட்டுல இருந்துகிட்டு இங்க இருக்குற அணில தூண்டி விடுங்க... இங்க இருக்குற ஒரு அணில் திருப்பரங்குன்றம் போச்சு அதோட அது life போச்சு...

97 18 2933 3 0
பாக்டீரியா @Bacteria_Offl 2026-11-27T14:52:00.000Z

🐿️ ~ நாளைக்கு எதோ சம்பவம் இருக்கு போலேயே அணில்ஸ் assemble... // டேய்... ஆவாஸ் காட்ட ஆன்லைன்ல போடுற tag war கிடையாதுபா இது... நேர்ல போனும்.. நேர்ல போய் உங்க குரங்கு சேட்டைய காட்டுனா தமிழ்நாடு போலீஸ் மாதிரி அமைதியா இருக்க மாட்டாங்க CRPF, டிக்கிலயே ஓட்டைய போட்டு விட்ருவாங்க... https://t.co/urd4cwChx8

167 16 5877 4 0
@Bacteria_Offl reposted
M.K.Stalin @mkstalin 2026-11-27T14:42:20.000Z

தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.

7058 3018 966948 1336 399